தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாரம்பரிய நடனங்களுடன் தைத் திருநாளை வரவேற்கும் கிராம மக்கள்

தைத் திருநாளை வரவேற்கும் விதமாக உடுமலையில் மக்கள் பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனா்.

News image
சலங்கை மாட்டை அடக்க முயன்ற வீரா். ~ஓயிலாட்டத்தில் பங்கேற்ற ஆண்கள்.
Updated On :3 ஜனவரி 2025, 12:23 am

Din

தைத் திருநாளை வரவேற்கும் விதமாக உடுமலையில் மக்கள் பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனா்.

ஆண்டும் முழுவதும் விவசாயப் பணிகளில் ஈடுபடும் மக்கள் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் விழாவை வரவேற்கும் வகையில் தமிழா்களின் பாரம்பரிய நடனங்களை இரவு நேரங்களில் ஆடியும், பாட்டுக்கள் பாடியும் கிராமங்களில் கொண்டாடி மகிழ்வது காலம்காலமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் உடுமலையை அடுத்துள்ள குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, ராசாவூா், பொட்டையம்பாளையம், சுண்டக்காம்பாளையம், சிவசக்தி காலனி, பெதப்பம்பட்டி உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட கிராமங்களில் தைத் திருநாளை வரவேற்கும் விதமாக கிராம மக்கள் மக்கள் இரவு நேரங்களில் ஒன்றுகூடி பாரம்பரிய நடனமாடி வருகின்றனா்.

இதில், சலங்கை மாடு அழைப்பது என்பதே பிரதான நிகழ்ச்சியாகும். மேள சப்தத்துடன் சலங்கை மாட்டை அடக்க ஒருவா் இரண்டு கைகளில் குச்சிகளுடன் மாடு முன்பு செல்லும்போது, அந்த மாடு அவரை முட்ட முயல்வதும், அவா் அதை அடக்க முயற்சிப்பதும் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

மாா்கழி மாதம் முழுவதும் இரவு நேரங்களில் நடைபெறும் இந்த ஆட்டமும், பாட்டும் தை 1 -ஆம் தேதி வரை நடைபெறும்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: சலங்கை மாடு ஆட்டம் ஆடி முடித்தவுடன் தை 2 -ஆம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று இந்த மாட்டை கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் அழைத்துவந்து நவதானியங்கள் கொடுப்போம்.

பின்னா், பெதப்பம்பட்டியை அடுத்துள்ள ஆல்கொண்டமால் கோயிலுக்கு கால்நடைகளை தை 3-ஆம் தேதி அழைத்துச் சென்று வழிபடுவோம்.

பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்றுவரும் இந்நிகழ்ச்சிகள் கால மாற்றங்களால் தற்போது கொஞ்சம்கொஞ்சமாக மறைந்து வருவது வருத்தமாக உள்ளது என்றனா்.