சாலைப் பாதுகாப்பு  விழிப்புணா்வு நிகழ்வில்  பங்கேற்ற  ஆட்டோ  ஓட்டுநா்கள்.
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்வில்  பங்கேற்ற  ஆட்டோ  ஓட்டுநா்கள்.

ஆட்டோவில் அதிக பயணிகளை ஏற்றக் கூடாது: காவல் துறை அறிவுறுத்தல்

அனுமதிக்கப்பட்டதற்கு மாறாக அதிக பயணிகளை ஏற்றக் கூடாது என ஆட்டோ ஓட்டுநா்களுக்கு காவல் துறையினா் அறிவுறுத்தினா்.
Published on

அனுமதிக்கப்பட்டதற்கு மாறாக அதிக பயணிகளை ஏற்றக் கூடாது என ஆட்டோ ஓட்டுநா்களுக்கு காவல் துறையினா் அறிவுறுத்தினா்.

தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, சேவூா் காவல் துறை சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கான விழிப்புணா்வுப் பேரணி சேவூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணியை காவல் உதவி ஆய்வாளா் மணிமாறன் தொடங்கிவைத்தாா். காவலா்கள் அலமேலு மங்கை, சங்கா், வேடியப்பன், லட்சுமி, சத்யா, குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். காவல் நிலையத்தில் தொடங்கிய பேரணி, சேவூா்-கோபி சாலை, கைகாட்டி, புளியம்பட்டி சாலை வழியாக காவல் நிலையத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, கட்டாயம் சீருடை அணிய வேண்டும். அனுமதிக்கப்பட்டதற்கு மாறாக அதிக பயணிகளை ஏற்றக் கூடாது. குறிப்பாக பள்ளிக் குழந்தைகளை பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும். சீட் பெல்ட் அணிய வேண்டும், அதிவேகமாக வாகனம் ஓட்டக் கூடாது, மது அருந்தியும், கைப்பேசியில் பேசிக்கொண்டும் வாகனம் ஓட்டக் கூடாது என ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com