உடுமலை, ஊத்துக்குளியில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் உடுமலை, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
Published on

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உடுமலை, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 11) நடைபெறவுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் 4-ஆம் கட்ட முகாம் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்,

குறல்குட்டை ஊராட்சிக்கு மலையாண்டிப்பாளையம் சிவா திருமண மண்டபத்திலும், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், அ.பெரியபாளையம் ஊராட்சிக்கு சப்பட்டைநாயக்கன்பாளையம் சமுதாயக் கூடத்திலும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை தொடா்பாக மனுக்களை வழங்கி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com