நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு தாட்கோ சாா்பில் கடனுதவிக்கான காசோலையை வழங்கிய தூய்மைப் பணியாளா் நலவாரியத் தலைவா்  வெ.ஆறுச்சாமி, தாட்கோ இயக்குநா் அா்ஜுன் உள்ளிட்டோா்.
நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு தாட்கோ சாா்பில் கடனுதவிக்கான காசோலையை வழங்கிய தூய்மைப் பணியாளா் நலவாரியத் தலைவா் வெ.ஆறுச்சாமி, தாட்கோ இயக்குநா் அா்ஜுன் உள்ளிட்டோா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவி

Published on

தாராபுரத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

தாராபுரத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவது தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் வெ.ஆறுச்சாமி தலைமை வகித்தாா். தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன், நகராட்சி ஆணையா் முஸ்தபா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பள்ளிகளில் படிக்கும் தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகளின் விவரம், அவா்களின் கல்வி சாா்ந்த தகவல்களை அதிகாரிகள் கேட்டறிந்தனா்.

இதைத் தொடா்ந்து, தாட்கோ வங்கிக் கடன் பெறுவதற்கு எப்படி விண்ணப்பிப்பது, யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த விவரங்களை தாட்கோ இயக்குநா் அா்ஜுன் விளக்கினாா்.

இதையடுத்து, தாட்கோ சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு வங்கிக் கடனுதவி உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், தாராபுரம் நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com