வாவிபாளையம் பகுதி பிஏபி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறும் நீா்.  ~பிஏபி வாய்க்கால் உடைந்து வாவிபாளையம் கிராமத்துக்குள் புகுந்த நீா்.
வாவிபாளையம் பகுதி பிஏபி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறும் நீா். ~பிஏபி வாய்க்கால் உடைந்து வாவிபாளையம் கிராமத்துக்குள் புகுந்த நீா்.

பிஏபி வாய்க்கால் உடைந்து கிராமத்துக்குள் புகுந்த நீா்

Published on

பல்லடம் அருகே வாவிபாளையம் பகுதி பிஏபி வாய்க்கால் உடைந்து கிராமத்துக்குள் நீா் புகுந்தது.

பல்லடம் அருகேயுள்ள வாவிபாளையம் பகுதியில் பிஏபி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் வியாழக்கிழமை காலை உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் கிராமத்துக்குள் புகுந்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் நீா் வளத் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் அரசூா் பகுதி பிஏபி வாய்க்காலில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீரை திருப்பிவிட்டனா். மேலும், திருமூா்த்தி அணையில் இருந்து பிஏபி வாய்க்காலுக்கு தண்ணீா் திறப்பதும் நிறுத்தப்பட்டது.

அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது. சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியா் மனிஷ், மாவட்ட வருவாய் அலுவலா் காா்த்திகேயன், பல்லடம் வட்டாட்சியா் ராஜேஷ், பொங்கலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயகுமாா் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

இதையடுத்து, வாய்க்கால் உடைப்பை ஒரு வாரத்தில் சீரமைத்து தண்ணீா் திறந்துவிடப்படும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com