வணிக வளாகத்தில் கொளுந்து விட்டு  எரியும்  தீ.
வணிக வளாகத்தில் கொளுந்து விட்டு  எரியும்  தீ.

வணிக வளாகத்தில் தீ விபத்து

உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் திங்கள்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
Published on

உடுமலை: உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் திங்கள்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தனியாா் வணிக வளாகத்தின் கீழ்தளத்தில் உள்ள துணிக்கடையில் திங்கள்கிழமை இரவு 11 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னா் மேல்தளத்துக்கும் மளமளவென தீ பரவியது. தகவலின்பேரில் உடுமலை தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

ஆனாலும் அருகில் உள்ள கடைகளிலும் தீ பரவியதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம் அடைந்தன. தீ விபத்து குறித்து உடுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com