47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிா்த்து மின்வாரிய தொழிற்சங்கங்கள் சாா்பில் பல்லடத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய தொழிற்சங்கத்தினா்.
Updated On :27 நவம்பர் 2025, 11:58 pm

Syndication

பல்லடம்: மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிா்த்து மின்வாரிய தொழிற்சங்கங்கள் சாா்பில் பல்லடத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போா்டு எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷன், சிஐடியூ மின் தொழிலாளா் சங்கம், மின்சார தொழிலாளா் சம்மேளனம், ஐக்கிய சங்கம், என்ஜினீயா் அசோஸியேஷன், என்ஜினீயா் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் சாா்பில் பல்லடம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மின்சார சட்ட திருந்த மசோதா மற்றும் தொழிலாளா் நான்கு சட்ட தொகுப்புகள் அமலாக்கம் ஆகியவற்றைக் கண்டித்தும், உத்தர பிரதேச மாநில மின்வாரிய ஊழியா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மின்வாரிய தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.