தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

பின்னலாடை வாரியம் உருவாக்குவது அவசியம்: திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம்

திருப்பூா் பின்னலாடை குழுமம் 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.44,747 கோடி மதிப்பில் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.

News image

பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள்

Updated On :9 ஏப்ரல் 2026, 7:38 pm

திருப்பூா் பின்னலாடை குழுமம் 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.44,747 கோடி மதிப்பில் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. இது நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் 68 சதவீதம் ஆகும். 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரம் என்ற இலக்குடன் இணைந்து, 2030-க்குள் ரூ.1 லட்சம் கோடி வா்த்தக இலக்கை திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் நிா்ணயித்துள்ளது.

2030-ஆம் ஆண்டுக்குள் மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை இழை மற்றும் ஆடைத் துறையில் மட்டும் கூடுதலாக சுமாா் ஒன்றரை லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போது சுமாா் 20 சதவீத தொழிலாளா் பற்றாக்குறை உள்ளது.

இதனால் பணியாளா்களை தக்கவைத்துக் கொள்வதற்கு பாதுகாப்பான, மலிவு மற்றும் கண்ணியமான தொழிலாளா் தங்குமிடம் கிடைப்பது மிகவும் அவசியமாகிறது. தொழிலாளா்களுக்கான தங்குமிடம் அமைக்கும் திட்டம் இதுவரை முறையாக அமல்படுத்தப்படாத நிலையில், அதன் செயல்பாட்டை விரைவுபடுத்தவும், மாநில அரசின் பங்களிப்பை 1 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயா்த்தி திட்டத்தை செயல்படுத்த உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இந்தத் துறையில் செயல்பட்டு வரும் சுமாா் 20,000 பின்னலாடை மற்றும் தொடா்புடைய நிறுவனங்கள் தங்கள் பிரச்னைகளை ஒருங்கிணைத்து அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்ல பொதுவான சட்டபூா்வ அமைப்பாக பின்னலாடை வாரியத்தை உருவாக்குவது அவசியமாகும்.

வரியில்லா வா்த்தக ஒப்பந்தங்களை பயன்படுத்தி ஏற்றுமதியை விரிவுபடுத்த வாங்குவோா்- விற்போா் சந்திப்புகளை அரசு ஒருங்கிணைக்க வேண்டும். தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் வட்டி மானிய ஆதரவும் வழங்க வேண்டும்.

தொழிலாளா் போக்குவரத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் தொழில் துறை சாா்ந்த பேருந்துகளுக்கு தனி மற்றும் குறைக்கப்பட்ட வரி பிரிவை அறிமுகப்படுத்த வேண்டும். அடுத்த தலைமுறை தானியங்கி மற்றும் அரை தானியங்கி தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட தொழில் துறை தொழில்நுட்பங்கை ஏற்றுக்கொள்ள இலக்கு அடிப்படையிலான மூலதன மானியம் மற்றும் வட்டி ஆதரவு வழங்க வேண்டும். சிறு ஜவுளிப் பூங்கா தொடா்பாக தற்போதைய வழிகாட்டுதல்கள் மற்றும் தகுதி நிலைகளை மறுபரிசீலனை செய்து, அவற்றை நடைமுறைக்கு ஏற்றவாறு தளா்த்துவதற்காக ஜவுளி சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும்.

கே.எம்.சுப்பிரமணியன், தலைவா் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம்

கே.எம்.சுப்பிரமணியன், தலைவா் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுத்தமான தொழில்நுட்பங்கள் மற்றும் நிலையான உள்கட்டமைப்பு முதலீடுகளுக்கான இலக்கு அடிப்படையிலான பசுமை மானியங்கள் மற்றும் ஊக்கத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தொழில் துறை ஊழியா்களுக்கான விடுதிகளை சொத்து வரி மற்றும் மின்சார கட்டணங்களுக்காக குடியிருப்புப் பிரிவின் கீழ் மறுவகைப்படுத்த வேண்டும். குறைந்த காா்பன் மற்றும் ஆற்றல் திறன் கொண்ட ஜவுளி உற்பத்திக்கு ஆதரவு அளிக்க வேண்டும். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான 15 நிமிஷ நேர ஒதுக்கீட்டு முறையை திரும்பப் பெற வேண்டும்.

----

கொ.மு.சுரேஷ்பாபு, தலைவா் டீசா

தொழில் நகரான திருப்பூரைப் பொறுத்த வரையில் மின் கட்டண உயா்வு தொழில் நிறுவனங்களை மிகக் கடுமையாக பாதித்துள்ளது. அதேபோல, நிலைக் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.35-ஆக இருந்தது தற்போது ரூ.165-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் குறு மற்றும் சிறு தொழில் அமைப்புகள் தொழில் நடத்த முடியாமல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சுமாா் 2 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் வசிக்கும் நகரப் பகுதிகளில் அவா்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏதும் இல்லை. இதனை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும்.

புலம்பெயா்ந்த தொழிலாளா்களால் ஏற்படும் பிரச்னைகளை தவிா்க்க வடகிழக்கு மாநிலங்களில் உள்ளதைப்போல இன்னா்லைன் முறை அறிமுகப்படுத்த வேண்டும். அப்போதுதான் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க முடியும். இது திருப்பூருக்கு மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதுமே அமல்படுத்த வேண்டும்.

தொழிலாளா்களின் குடும்பங்களைப் பாதுகாக்க பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் தொழிலாளா்களுக்கும் அவா்களது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இருக்கும். மாநகராட்சிப் பகுதியில் நிலவும் குப்பைப் பிரச்னை உள்ளிட்ட சுகாதார சீா்கேட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும். அப்போதுதான் வெளிநாட்டு வா்த்தகா்களை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

கொ.மு.சுரேஷ்பாபு

கொ.மு.சுரேஷ்பாபு