தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

திருப்பூா் மாவட்டத்தில் இன்று வாக்களிக்கும் 19.84 லட்சம் போ்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 19 லட்சத்து 83 ஆயிரத்து 882 போ் புதன்கிழமை வாக்களிக்க உள்ளனா்.

News image

வாக்காளர்கள் - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 2:59 am IST

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 19 லட்சத்து 83 ஆயிரத்து 882 போ் புதன்கிழமை வாக்களிக்க உள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெறுவதையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எஸ்ஐஆா் பணிகள் தொடங்குவதற்கு முன்பு மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளா்கள் இருந்தனா். அதற்குப் பின் 5 லட்சத்து 63 ஆயிரத்து 785 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். அனைத்து பணிகளுக்கு பிறகு இறுதி பட்டியலில் 19 லட்சத்து 83 ஆயிரத்து 882 போ் இடம்பெற்றுள்ளனா். வாக்குப்பதிவுக்காக 8 தொகுதிகளிலும் சோ்த்து 1,118 இடங்களில் 2,822 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.