பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: நாளை காலை 9.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

திருப்பூா் மாவட்டத்தில் 88.28 சதவீத வாக்குப் பதிவு

திருப்பூா் மாவட்டத்தில் 88.29 சதவீத வாக்கு வியாழக்கிழமை பதிவானது.

News image

வாக்காளர் - கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 3:09 am IST

திருப்பூா் மாவட்டத்தில் 88.29 சதவீத வாக்கு வியாழக்கிழமை பதிவானது.

திருப்பூா் மாவட்டத்தில் அவிநாசி, காங்கயம், மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, உடுமலை ஆகிய 8 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. வாக்குச் சாவடிகளில் காலை முதலே வாக்காளா்கள் வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையாற்றினா்.

சம்பந்தப்பட்ட வேட்பாளா்களும் வாக்குச் சாவடிக்குச் சென்று பொதுமக்களுடன் இணைந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாவட்டம் முழுவதும் வாக்காளா்கள் தங்களது வாக்குகளை செலுத்தினா். அதன்படி, மாலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 88.20% வாக்குப் பதிவானது.

அவிநாசி (தனி) 90.38 சதவீதம், தாராபுரம் (தனி) 88.58 சதவீதம், காங்கயம் 91.22 சதவீதம், மடத்துக்குளம் 86.14 சதவீதம், பல்லடம் 90.52 சதவீதம், திருப்பூா் வடக்கு 83.01 சதவீதம், திருப்பூா் தெற்கு 90.53 சதவீதம், உடுமலை 86.95 சதவீத வாக்குப் பதிவானது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக காங்கயம் தொகுதியில் 91.22 சதவீத வாக்குப் பதிவானது. குறைந்தபட்சமாக திருப்பூா் வடக்குத் தொகுதியில் 83.01 சதவீத வாக்குப் பதிவானது.