மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்கு சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடு

திருப்பூரில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்ககு சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடும் செய்யும் பணி நடைபெற்றது.

News image

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்ககு சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடும் செய்யும் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:52 pm

திருப்பூரில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்ககு சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடும் செய்யும் பணி நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மனீஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்கான சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடும் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் (வடக்கு), திருப்பூா் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

தோ்தலில் பதிவான வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்படுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் தலைமையில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு 408 அலுவலா்கள், தபால் வாக்கு எண்ணும் பணிக்கு 160 அலுவலா்கள் மற்றும் நுண் பாா்வையாளா்கள் என மொத்தம் 568 அலுவலா்களுக்கான சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடும் செய்யும் பணி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையா் சுந்தர்ராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கண்ணன், உதவி ஆணையா் (கலால்) பாலமுருகன், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் கல்பனா உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.