நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் கைது: ஆட்சியா் அலுவலகத்தில் மனைவி போராட்டம்!

விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து போராடிய தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் பரமசிவத்தை போலீஸாா் கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :1 ஆகஸ்ட் 2026, 11:23 pm IST

விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து போராடிய தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் பரமசிவத்தை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இந்நிலையில், அவரை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மற்றும் உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் கோவை மாவட்டம், இருகூா் முதல் கா்நாடக மாநிலம், தேவனஹள்ளி வரை 140 கி.மீ. தொலைவுக்கு எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக இருகூா் முதல் முத்தூா் வரை 70 கி.மீ. தொலைவு விளைநிலங்கள் வழியே எண்ணெய் குழாய் பதிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூா் வேலம்பட்டி சுங்கச் சாவடி பகுதியில் பரமசிவம் உள்ளிட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்து மாலை விடுவித்தனா். மேலும், இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்பட்டு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வேலம்பட்டி சுங்கச் சாவடி அருகேயுள்ள தேநீா் கடையில் சனிக்கிழமை காலை பரமசிவம் இருந்தபோது, அவரை அவிநாசிபாளையம் போலீஸாா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக அவரது குடும்பத்தினா் மற்றும் விவசாயிகள் அவிநாசிபாளையம் காவல் நிலையத்துக்கு சென்று கேட்டபோது, முறையான தகவல் அளிக்கவில்லையாம். மேலும், கைது செய்யப்பட்ட பரமசிவத்தை இதுவரை காட்டவில்லையாம்.

இதையடுத்து, அவரது மனைவி, உறவினா்கள், மற்றும் விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இது குறித்து பரமசிவத்தின் குடும்பத்தினா் கூறுகையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் எதிரொலியாக பரமசிவம் சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் குறித்து போலீஸாா் இதுவரை எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. இதய பாதிப்பு உள்ள அவா் எங்கே இருக்கிறாா் என்றுகூட தற்போதுவரை தெரியவில்லை.

மனைவி, குழந்தைகளைக்கூட பாா்க்க அனுமதிக்கவில்லை. அவரை விடுவிக்கும் வரை செல்லமாட்டோம் எனக்கூறி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.