தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அமைச்சா் நிா்மல்குமாருக்கு திருப்பூா் எம்.பி. கண்டனம்

திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் - கோப்புப் படம்

Published On :

பொறுப்புள்ள பதவியில் இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் அரசியல் நிலைப்பாட்டில் கருத்துகளை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் முன்வைக்கக் கூடாது என திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் கண்டனம் தெரிவித்தாா்.

திருப்பூா் ஏஐடியூசி அலுவலகத்தில் பனியன் பேக்டரி லேபா் யூனியன் சங்க மகா சபைக் கூட்டம் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டதுக்கு பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காவிரி மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியும் கா்நாடக அரசு தண்ணீா் திறந்துவிட மாட்டோம் எனக் கூறுவது, அம்மாநில அரசின் பொறுப்பற்ற நடவடிக்கையாகும். காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி அனைத்துக் கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு அதன்படி செயல்பட வேண்டியது தற்போதைய அவசியம்.

காவிரி நீா் திறந்துவிடாமல் இருப்பதற்கு முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின், கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு அழுத்தம் கொடுத்ததாக அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் கூறிய கருத்துக்கு, பொறுப்புள்ள அமைச்சா் இதுபோன்ற ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது. பொறுப்புள்ள பதவியில் இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் அரசியல் நிலைப்பாட்டில் கருத்துகளை முன்வைப்பது தவறு. ஆதாரம் இல்லாமல் அத்தகைய கருத்துகளை தெரிவிக்கக் கூடாது எனத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.