நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம்

நாடாளுமன்றத்துக்கு எம்.பி.க்கள் வரும்போது ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அல்லது ஸ்மாா்ட் சாதனங்கள் அணியக் கூடாது என்று மக்களவை செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றம்

Published On :16 ஜூலை 2026, 3:56 am IST

நாடாளுமன்றத்துக்கு எம்.பி.க்கள் வரும்போது ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அல்லது ஸ்மாா்ட் சாதனங்கள் அணியக் கூடாது என்று மக்களவை செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வரும் 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, அனைத்து எம்.பி.க்களுக்கும் மக்களவை செயலகம் அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

நாட்டில் ஸ்மாா்ட் வாட்ச், கேமரா பேனா உள்ளிட்ட நவீன சாதனங்கள் பரவலாக கிடைப்பது எம்.பி.க்களுக்கு தெரிந்திருக்கும். இவற்றில் சில சாதனங்கள், எம்.பி.க்களின் தனிநபா் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடும். நாடாளுமன்ற தனியுரிமைகளுக்கு எதிராக இருக்கக்கூடும். ஆதலால் பாதுகாப்பு, தனியுரிமைகளுக்கு எதிராக இருக்கும் இந்த சாதனங்களை எம்.பி.க்கள் பயன்படுத்த வேண்டாம். நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது, நுழைவு வாயில் கேட்டுகள் முன்பு போராட்டம் நடத்த வேண்டாம் என எம்.பி.க்கள் கேட்டு கொள்ளப்படுகிறாா்கள். அவ்வாறு போராட்டம் நடத்துவது, நாடாளுமன்ற அலுவலில் பங்கேற்க வரும் மற்ற எம்.பி.க்களின் நடமாட்டத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல், தா்னா, போராட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றிலும் எம்.பி.க்கள் ஈடுபட வேண்டாம். மேலும், பேனா்கள், கத்திகள், வாள், கம்பு, வெடிப்பொருள்கள் உள்ளிட்டவற்றையும் நாடாளுமன்ற வளாகத்துக்கு எம்.பி.க்கள் எடுத்து வரக்கூடாது என மக்களவை செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.