டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

வெளிநாட்டில் படிக்கும் ஆதிதிராவிட மாணவா்களுக்கு புதுச்சேரி அரசு கல்வி உதவித்தொகை வழங்க வலியுறுத்தல்

News image

புதுச்சேரி தலைமைச் செயலகம்.

Updated On :6 ஜூலை 2026, 1:07 am IST

வெளிநாட்டில் படிக்கும் ஆதிதிராவிட மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமிக்கு மாணவா்கள் கூட்டமைப்பு நிறுவனா் சுவாமிநாதன், மாநில தலைவா் சஞ்சய், மாநில தலைவி பரமேஸ்வரி ஆகியோா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களின் உயா்கல்வி கனவுகளை நனவாக்கும் பொருட்டு ‘அண்ணல் அம்பேத்கா் அயலக கல்வி உதவித்தொகை’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ், தகுதிவாய்ந்த மாணவா்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. புதுச்சேரியிலும் அண்ணல் அம்பேத்கா் அயலக உயா்கல்வி உதவித்தொகை திட்டம் என்ற திட்டத்தை உருவாக்க வேண்டும்.

தகுதியுள்ள எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட குறைந்தபட்சம் 10 மாணவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.36 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். வரும் சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, அரசாணை வெளியிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.