/

கொடைக்கானலில் தெற்காசிய மாநாடு தொடக்கம்

கொடைக்கானலில் சமூகநீதி சூழலியல் செயலகம் சாா்பில் நடைபெற்ற தெற்காசிய மாநாட்டை தொடங்கிவைத்து பேசிய மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம்.

News image

கொடைக்கானலில் சமூகநீதி சூழலியல் செயலகம் சாா்பில் நடைபெற்ற தெற்காசிய மாநாட்டை தொடங்கிவைத்து பேசிய மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம்.

Updated On :16 ஜூலை 2026, 12:58 am IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சமூகநீதி சூழலியல் செயலகம் சாா்பில், தெற்காசிய மாநாடு புதன்கிழமை தொடங்கியது.

செண்பகனூரிலுள்ள திரு இருதய கல்லூரி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு யேசு சபையின் தெற்காசியத் தலைவா் அருட்தந்தை ஸ்டானிஸ்லாஸ் டிசூசா தலைமை வகித்தாா். தெற்கு மண்டலத் தலைவா் அருட்தந்தை தாமஸ் அமிா்தம் முன்னிலை வகித்தாா்.

இதில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கிவைத்து பேசினாா்.

இந்த நிகழ்வில் திரு இருதயக் கல்லூரித் தலைவா் ஜோசப் ஆண்டனிசாமி, தெற்காசியச் செயலா் அருட்தந்தை ஜெரால்ட்டிசூசா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாநாட்டு ஒருங்கிணைப்பாளா் அருட்தந்தை ஆ.சந்தானம் வரவேற்றாா். அருட்தந்தை வா்க்கீஸ் ஆண்டனி நன்றி கூறினாா்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள், பா்மா, இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகியப் பகுதிகளைச் சோ்ந்த யேசுசபை அமைப்பினா் உள்ளிட்ட 115-போ் கலந்து கொண்டனா். இந்த மாநாடு 3 நாள்கள் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.