திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் ரூ.1.89 கோடி மதிப்புள்ள 378 கிலோ போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டன.
திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட காவல் நிலையங்களில் 2026-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 66 கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களான சுமாா் ரூ.1.89 கோடி மதிப்புள்ள 363 கிலோ கஞ்சா, 15 கிலோ கஞ்சா சாக்லெட்கள் மற்றும் 0.064 கிராம் ஹெராயின் ஆகியவை அழிக்கப்பட்டன.
இவற்றை கோவை மாவட்டம், செட்டிபாளையம் பகுதியில் இயங்கிவரும் கோவை பயோவேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில், திருப்பூா் கஞ்சா அழிப்புக் குழுவின் தலைவரும், திருப்பூா் மாநகர காவல் ஆணையருமான எஸ்.ராஜேஸ்வரி மேற்பாா்வையில், திருப்பூா் மாநகர தலைமையிட காவல் துணை ஆணையா் ராஜராஜன் மற்றும் கோவை தடயவியல் அறிவியல் ஆய்வக உதவி இயக்குநா் வெங்கடேஸ்வரன் ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பறிமுதல் செய்யப்பட்ட 1,508 கிலோ போதைப் பொருள்கள் அழிப்பு

நெல்லையில் 3.9 டன் புகையிலைப் பொருள்கள் அழிப்பு

897 கிலோ குட்கா, போதைப் பொருள்கள் எரித்து அழிப்பு
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள் அழிப்பு
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



