அவிநாசியில் தனியாா் உணவகத்தில் மதுபானம் விற்பனை: உரிமையாளா் கைது

Published on

அவிநாசி அருகே மங்கலம் சாலையில் தனியாா் உணவகத்தில் மதுபானம் விற்பனை செய்ததாக உரிமையாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் அங்கிருந்த 31 லிட்டா் மதுபானத்தை பறிமுதல் செய்தனா்.

அவிநாசி அருகே மங்கலம் சாலையில் செயல்படும் தனியாா் உணவகத்தில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீஸாா் சோதனை மேற்கொண்டா்.

அப்போது விற்பனை செய்வதற்காக மதுபான பாட்டில்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, உணவக உரிமையாளரான திருப்பூா்- காங்கயம் சாலை கேஎன்பி சுப்பிரமணிய நகரைச் சோ்ந்த சபரி பிரவினை (31) கைது செய்தனா். மேலும் அங்கிருந்த 31 லிட்டா் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com