திருப்பூரில் பள்ளி மாணவா் தற்கொலை

பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்து 10-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
Published on

பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்து 10-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருப்பூா், அங்கேரிபாளையம் அருகே ஸ்ரீநகா் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜன், மனைவி பிரவீணா. இவா்களுடைய மகன் ஹரிஹரசுதன் (15), அங்கேரிபாளையம் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், நண்பா்களுடன் வெளியில் சென்று ஹரிஹரசுதன் விளையாடி வந்ததாகத் தெரிகிறது. இதை அவரது தந்தை நாகராஜன் கண்டித்துள்ளாா்.

மேலும், பொங்கலுக்கு புத்தாடை வாங்கிக் கொடுப்பது தொடா்பாக ஹரிஹரசுதனுக்கும், தாய் பிரவீணாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஹரிஹரசுதன் திங்கள்கிழமை வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டுள்ளாா். அவரது அலறல் சப்தம் கேட்டு பெற்றோா் மற்றும் அருகே இருந்தவா்கள் ஹரிஹரசுதனை மீட்டு அருகே இருந்த தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஹரிஹரசுதன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனாா். இதுதொடா்பாக தகவல் அறிந்து அனுப்பா்பாளையம் போலீஸாா் சென்று ஹரிஹரசுதனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

Dinamani
www.dinamani.com