கைத்தறி துறையின் சாா்பில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம்

கைத்தறித் துறையின் சாா்பில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

கைத்தறித் துறையின் சாா்பில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசின் கைத்தறி துறையின் சாா்பில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய சாதாரண விசைத்தறிகளை நாடா இல்லாத ரேப்பியா் தறிகளாக நவீனப்படுத்துவதற்கான சில உபகரணங்கள் பொருத்துதல் மற்றும் புதிய ரேப்பியா் தறிகள் பயனாளிகளுக்கு சப்ளை செய்வதற்கு விருப்பமுள்ள நிறுவனங்கள் உரிய வடிவிலான கோரிக்கைகளுடன் வரும் ஜனவரி 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் சரக கைத்தறித் துறை, உதவி இயக்குநா் அலுவலகத்தை 96779 99791 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com