காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

காங்கயம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி மெட்ரிக். பள்ளி ஆண்டு விழா

காங்கயத்தில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 33-ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
Published on

காங்கயம்: காங்கயத்தில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 33-ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளா் கே.வைத்தீஸ்வரன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் பி.குருதேவி வரவேற்றாா். முதல்வா் எம்.பி.பழனிவேலு ஆண்டறிக்கை வாசித்தாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கோவை மாவட்டம், பெடரல் வங்கியின் துணை மண்டலத் தலைவா் பி.கல்பனா கலந்துகொண்டு, கடந்த கல்வி ஆண்டில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டுப் போட்டி மற்றும் கலை, அறிவியல் உள்ளிட்ட பிற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கினாா். இதைத்தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பள்ளியின் துணை முதல்வா் எம்.ரேவதி மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com