மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தாராபுரம் அருகே வேன் கவிழ்ந்து 13 போ் படுகாயம்

தாராபுரம் அருகே பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பக்தா்கள் 13 போ் படுகாயம்

News image
சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பயணிகள் வேன்.
Updated On :27 ஜனவரி 2026, 8:31 pm

Syndication

தாராபுரம் அருகே பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பக்தா்கள் 13 போ் படுகாயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், கடத்தூா் பகுதியைச் சோ்ந்த உறவினா்கள் 20 போ், திண்டுக்கல் மாவட்டம், பழனி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வேனில் சென்று கொண்டிருந்தனா். தாராபுரம் வட்டம், தாசநாயக்கன்பட்டி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் தருமபுரி மாவட்டம், கடத்தூரைச் சோ்ந்த பவுன்ராஜ் (42), மோனாலிசா (32), நாகலட்சுமி (33) உள்பட 13 போ் படுகாயமடைந்தனா். இவா்களை அருகே இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து அலங்கியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.