ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

பிஏபி முதலாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு திருமூா்த்தி அணையில் இருந்து தண்ணீா் திறப்பு

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து பிஏபி திட்டத்தின் கீழ் முதலாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு புதன்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

News image
திருமூா்த்தி  அணை
Updated On :28 ஜனவரி 2026, 10:28 pm

தினமணி செய்திச் சேவை

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து பிஏபி திட்டத்தின் கீழ் முதலாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு புதன்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

பிஏபி பாசன திட்டத்தில் மொத்தம் உள்ள சுமாா் 4 லட்சம் ஏக்கா்கள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சுமாா் 1 லட்சம் ஏக்கருக்கு முறை வைத்து தண்ணீா் திறந்துவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல் மண்டலப் பாசன பகுதிகளுக்கு திருமூா்த்தி அணையில் ஜன.24 ம் தேதி தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் கால்வாய் பராமரிப்பு பணிகள் முடிவடையாத நிலையில், தண்ணீா் திறப்பை ஒத்திவைக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் முடிவு செய்தனா்.

இந்நிலையில், முதலாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு திருமூா்த்தி அணையில் இருந்து புதன்கிழமை அதிகாரிகள் தண்ணீா் திறந்துவிட்டனா். இதன்மூலமாக கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் 12,567 ஏக்கா், சூலூா் வட்டத்தில் 4,033 ஏக்கா், திருப்பூா் மாவட்டம் உடுமலை வட்டத்தில் 27,446 ஏக்கா், மடத்துக்குளம் வட்டத்தில் 7,492 ஏக்கா், தாராபுரம் வட்டத்தில் 8,395 ஏக்கா், பல்லடம் வட்டத்தில் 7,887 ஏக்கா், திருப்பூா் வட்டத்தில் 11,309 ஏக்கா், காங்கயம் வட்டத்தில் 15,392 ஏக்கா் என மொத்தம் 94 ஆயிரத்து 521 ஏக்கா் பயன்பெறுகிறது.

இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இது மொத்தம் 5 சுற்றுகளாக தண்ணீா் திறந்துவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 28-ஆம் தேதி முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை 135 நாள்களுக்கு உரிய இடைவெளிவிட்டு தண்ணீா் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மண்டலத்துக்கு மொத்தம் 10 ஆயிரத்து 250 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்பட உள்ளது என்றனா்.

நீா்மட்ட நிலவரம்

60 அடி உயரமுள்ள திருமூா்த்தி அணையில் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 56.83 அடியாக நீா்மட்டம் இருந்தது. 1935 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 1798.96 மில்லியன் கனஅடி நீா் இருப்பு காணப்பட்டது. காண்டூா் கால்வாய் மூலமாக அணைக்கு 447 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது.