பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

பல்லடத்தில் 140 கிலோ குட்கா பறிமுதல்: 2 போ் கைது

பல்லடம் அருகே நொச்சிபாளையம் பிரிவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 140 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரைக் கைது செய்தனா்.

News image

பல்லடம் அருகே நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி நின்ற குட்கா கடத்தி வந்த காா்.

Updated On :1 ஜூலை 2026, 6:27 am IST

பல்லடம் அருகே நொச்சிபாளையம் பிரிவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 140 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரைக் கைது செய்தனா்.

பல்லடம் அருகே நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் பல்லடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்த சொல்லியுள்ளனா். ஆனால், காரை ஓட்டி வந்த நபா் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளாா். இதையடுத்து, போலீஸாா் காரை துரத்திச் சென்றனா்.

அப்போது, அல்லாளபுரம் சாலையில் பாரியூா் அம்மன் நகா் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பின்னா் காரில் இருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். மேலும், காரில் சோதனை செய்தபோது, மூட்டைமூட்டையாக குட்கா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், குட்கா கடத்தி வந்தது தெக்கலூா் பகுதியைச் சோ்ந்த தினேஷ் செபாஸ்டியன் (40), திருப்பூா் வீரபாண்டி பகுதியைச் சோ்ந்த பெரியசாமி (30) என்பதும் தெரியவந்தது. இதில் பெரியசாமி தனது மளிகைக் கடை மற்றும் மற்ற வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதற்காக குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்தினாா். மேலும், பெரியசாமி வீட்டில் சோதனை செய்தபோது, அவரது வீட்டில் 40 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இவா்கள் இருவரும் மொத்தமாக குட்காவை வாங்கி வந்து பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 140 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.