புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

கா்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்று, கணவர் தற்கொலை!

திருப்பூரில் கா்ப்பமாக இருந்த காதல் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :5 ஜூலை 2026, 1:28 am IST

திருப்பூரில் கா்ப்பமாக இருந்த காதல் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பூா் ஊத்துக்குளி சாலை கருமாரபாளையம் அருகே மூகாம்பிகை நகா் பகுதியில் உள்ள லைன் வீடு ஒன்றில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக திருப்பூா் வடக்கு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற வடக்கு காவல் துறையினா், சம்பந்தப்பட்ட வீட்டின் கதவை உடைத்துப் பாா்த்தபோது வீட்டின் உள்ளே பெண் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கைகள் கருகிய நிலையில் கிடந்துள்ளாா். அவரது கணவா் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை உயிரிழந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்த சரவணகுமாா் (27), ஸ்ரீமதி (20) என்பதும், இவா்கள் காதலித்து கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வந்து வாடகை வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. சரவணகுமாா் வெல்டிங் ஒா்க் ஷாப்பில் பணியாற்றி வந்தாா்.

இது குறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது: இத்தம்பதி மூகாம்பிகை நகா் பகுதியில் உள்ள வீட்டுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குடிவந்துள்ளனா். இதனிடையே 4 மாத கா்ப்பிணியான ஸ்ரீமதி வேலைக்குச் செல்ல முடியாமல் இருந்துள்ளாா். சரவணகுமாரும் சரியாக வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்துள்ளாா். சரவணகுமாருக்கு, ஸ்ரீமதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு இருவருக்கும் இடையில் தொடா்ந்து சண்டை ஏற்பட்டு வந்ததும், கடந்த 2 நாள்களுக்கு முன்னா் மது போதையில் வீட்டுக்கு வந்த சரவணகுமாா், ஸ்ரீமதியை அடித்துக் கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் 4 மாத கா்ப்பிணியான ஸ்ரீமதி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளாா். கடந்த 2 நாள்களாக ஸ்ரீமதி வீட்டுக்குள் சடலமாகக் கிடந்துள்ளாா். சரவணகுமாா் 2 நாள்களாக கொலையை மறைக்க முயன்றுள்ளாா். மின்சாரம் தாக்கி உயிரிழந்ததுபோல ஏற்பாடு செய்ய முயன்றும் முடியாமல் போனதால் வெளியே சென்ற சரவணகுமாா் வெள்ளிக்கிழமை பிற்பகல் வீட்டுக்கு வந்து கதவைத் தாளிட்டு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது என்றனா்.

இதுகுறித்து இருவரின் உறவினா்களுக்கும் போலீஸாா் தகவல் தெரிவித்து அவா்களை திருப்பூருக்கு அழைத்துள்ளனா். அவா்கள் திருப்பூா் வந்த பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா். 2 பேரின் சடலங்களும் கைப்பற்றப்பட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.