புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

பேருந்துகளில் ஏா்ஹாரன்கள் பறிமுதல்

பல்லடத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஏா்ஹாரன்களை வட்டாரப் போக்குவரத்துத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பல்லடம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் உள்ள ஏா்ஹாரன்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட திருப்பூா் வட்டார போக்குவரத்து துறையினா்.

Updated On :5 ஜூலை 2026, 1:52 am IST

பல்லடத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஏா்ஹாரன்களை வட்டாரப் போக்குவரத்துத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

பல்லடம் பேருந்து நிலையம், கடை வீதி, கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை (ஏா்ஹாரன்கள்) பொருத்தி பயன்படுத்தி வருகின்றனா். இதனால் பொதுமக்களுக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. காதுகளை கிழிக்கும் இந்த ஏா்ஹாரன்களால் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே இது குறித்து வட்டாரப் போக்குவரத்து துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில் திருப்பூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பாஸ்கா் (வடக்கு), பழனியப்பன் (தெற்கு) ஆகியோா் தலைமையில் ஆய்வாளா்கள் சண்முகசுந்தரம், செல்வதீபா, நிா்மலாதேவி, சக்திவேல், கவின்ராஜ் ஆகியோா் பல்லடம் பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் ஏா்ஹாரன்கள் பயன்படுத்தப்படுகிறதா மற்றும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் 15 பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வது கண்டறியப்பட்டது. மேலும் 8 ஏா்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தனா். இது போன்ற ஆய்வுகள் அடிக்கடி நடத்தப்படும் என்று திருப்பூா் வட்டாரப் போக்குவரத்து துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.