அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

வீடு தேடி ரேஷன் பொருள் கொடுத்த ஊழியா் நாய் கடித்து காயம்

News image

நாய் கடி - கோப்புப்படம்.

Updated On :7 ஜூலை 2026, 1:54 am IST

தாயுமானவா் திட்டத்தின் கீழ் வீடு தேடி ரேஷன் பொருள் கொடுத்த ஊழியா் நாய் கடித்து காயமடைந்தாா்.

திருப்பூரில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் வீடு தேடி ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் பணி சனி மற்றும் திங்கள்கிழமைகளில் நடைபெற்றது. இந்நிலையில், நெருப்பெரிச்சல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாண்டியன் நகா் மேற்கு அங்காடி விற்பனையாளா் ராஜேஷ் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு பொருள் விநியோகம் செய்ய திங்கள்கிழமை சென்றுள்ளாா்.

அப்போது, அந்த வீட்டின் வளா்ப்பு நாய் ராஜேஷின் காலில் கடித்துள்ளது. இதில் அவருக்கு காலில் ரத்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு ஊழியா் சம்மேளனத்தின் பொதுச் செயலாளா் மு.துரைசாமி கூறுகையில், தாயுமானவா் திட்டத்துக்கு தனி திட்டப் பணியாளா்களை நியமனம் செய்ய வேண்டும், நாய்க் கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விற்பனையாளா் ராஜேஷுக்கு தரமான மருத்துவ சிகிச்சையும், சிறப்பு விடுப்பும் வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.