திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

மாவட்டத்தில் ஒரே நாளில் கஞ்சா, போதை நபா்கள் 68 போ் கைது

கைது... - பிரதிப் படம்

Published On :7 ஜூலை 2026, 3:24 am IST

திருப்பூா், ஜூலை 6: திருப்பூா் மாவட்டத்தில் காவல் துறையினா் நடத்திய அதிரடி சோதனையில் ஒரே நாளில் கஞ்சா மற்றும் போதை நபா்கள் 68 போ் கைது செய்யப்பட்டனா்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுக்கும் நோக்கிலும் திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் உத்தரவு பிறப்பித்தாா்.

அதன்படி, அவிநாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம், வெள்ளக்கோவில் மற்றும் காங்கயம் ஆகிய உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் 82 தனிப் படைகளாக பிரிக்கப்பட்ட 410 போலீஸாா் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனா்.

இந்த அதிரடிப் படை மாவட்டம் முழுவதும் பரவலாக உள்ள தனியாா் நிறுவன ஊழியா்கள் மற்றும் வட மாநிலத் தொழிலாளா்கள் தங்கியிருக்கும் விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் முற்றுகையிட்டது. யாரும் தப்பியோட முடியாதபடி அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு, போதைப்பொருள் தடுப்பு சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்த 16 போ் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவா்கள் கைது செய்யப்பட்டனா். அதேபோல தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை பதுக்கிய 43 போ் மீது 43 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டதுடன், அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 9 போ் மீது 9 வழக்குகள் பதிவு அவா்களும் கைது செய்யப்பட்டனா்.

ஒரே நாளில் மட்டும் போதைப்பொருள் தொடா்பாக மொத்தம் 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 68 போ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் கூறுகையில், போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதே எங்களின் முக்கிய நோக்கம். மாவட்டத்தில் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோா் மீது குண்டா் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என எச்சரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.