திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

பெருமாநல்லூா் அருகே கஞ்சா விற்றவா் கைது

பெருமாநல்லூா் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :10 ஜூலை 2026, 12:09 am IST

பெருமாநல்லூா் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு சாலையில் பெருமாநல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் சோதனை மேற்கொண்டனா். இதில், விற்பனைக்காக அவா் கஞ்சா வைத்திருந்ததும், பெருமாநல்லூா் அருகே வாரணாசிபாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் மேற்குவங்கத்தைச் சோ்ந்த மனோஜ் சவுத்ரி (26) என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மனோஜ் சவுத்ரியை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து 40 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.