கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

புதிய எண்ம நடைமுறைகளைப் பின்பற்றி சுகாதார சான்றிதழ் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தல்

திருப்பூா் மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரா்கள் புதிய எண்ம நடைமுறைகளைப் பின்பற்றி சுகாதார சான்றிதழ் பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :15 ஜூலை 2026, 1:02 am IST

திருப்பூா் மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரா்கள் புதிய எண்ம நடைமுறைகளைப் பின்பற்றி சுகாதார சான்றிதழ் பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள் மற்றும் வணிகா்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளால் நேரடியாக ஆன்லைன் மூலம் சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது. இனிமேல் விண்ணப்பதாரா்கள் புதிய எண்ம நடைமுறைகளைப் பின்பற்றி சுகாதார சான்றிதழ் பெற்றுக் கொள்ளே வேண்டும்.

இதற்காக தமிழ்நாடு இ-சேவை இணையதளத்தில் புதிய கணக்கை உருவாக்கி பதிவு செய்ய வேண்டும். இணையதளத்தில் கேட்கப்படும் தகவல்கள் மற்றும் சுய உறுதிமொழிப் படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டவுடன், தானியங்கி முறையில் உருவாக்கப்படும் சுகாதார சான்றிதழை இணையதளத்திலேயே நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சுகாதார சான்றிதழ் பெறுவதற்கான முழு நடைமுறையும் எண்ம மயமாக்கப்பட்டுள்ளதால், இணையதளத்தின் மூலமே பெற்றுக் கொள்ள வேண்டும். இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளையோ அல்லது திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தையோ நேரில் அணுக வேண்டாம் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.