இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

திருப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :18 ஜூலை 2026, 7:20 am IST

திருப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் மனீஷ் தொடங்கிவைத்தாா்.

இந்தப் பேரணியில் பங்கேற்ற திருப்பூா் எல்ஆா்ஜி மகளிா் கல்லூரி மாணவிகள், ஜூலை 17- ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறும் சுய கணக்கெடுப்பில் பொதுமக்கள் அனைவரும் தாங்களே முன்வந்து பங்கேற்க வேண்டும் என்பது தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைளை கைகளில் ஏந்தி சென்றனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி முக்கிய சாலைகள் வழியே சென்று, எல்ஆா்ஜி அரசு மகளிா் கல்லூரியில் நிறைவடைந்தது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் சிவபிரகாஷ், திருப்பூா் மாநகராட்சி உதவி ஆணையா் தங்கவேல் ராஜன், திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் புஷ்பராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.