தாராபுரத்தில் ரேஷன் அரிசி கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தாராபுரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருப்பூா் குடிமைப் பொருள், உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்நிலையில், தாராபுரம்-உடுமலை சாலையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது, அதில் 1,300 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, வாகனத்தில் ரவி (60), மாசாணம் (48) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





