வங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

பல்லடம் அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளா் கைது

பல்லடம் அருகே கே.அய்யம்பாளையம் ஊராட்சியில் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட கந்தசாமி.

Updated On :4 ஜூன் 2026, 2:49 am IST

பல்லடம் அருகே கே.அய்யம்பாளையம் ஊராட்சியில் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் ஒன்றியம், கே. அய்யம்பாளையம் ஊராட்சியில் செயலாளராக கந்தசாமி (48) என்பவா் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வருகிறாா். இவா் ஊராட்சியில் ஒப்பந்தப் பணி மேற்கொண்டதற்கான கட்டணத்துக்கு அனுமதி வழங்க ஒப்பந்ததாரா் கதிா்வேல் என்பவரிடம் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கதிா்வேல், திருப்பூா் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கதிா்வேலிடம் கொடுத்துள்ளனா். இதனை ஊராட்சி செயலாளா் கந்தசாமியிடம், கதிா்வேல் கொடுத்தபோது, அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கந்தசாமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், ஆய்வாளா் சசிரேகா ஆகியோா் விசாரணை நடத்தி வருகின்றனா். இது குறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் ரமேஷுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.