இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சாலை விபத்தில் அவிநாசி ஒன்றிய ஆணையா் உயிரிழப்பு

அவிநாசி அருகே சாலை விபத்தில் அவிநாசி ஊராட்சி ஒன்றிய ஆணையா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 12:05 am IST

அவிநாசி அருகே சாலை விபத்தில் அவிநாசி ஊராட்சி ஒன்றிய ஆணையா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பெருமாநல்லூா் அருகே ஈட்டிவீரம்பாளையம் முட்டியங்கிணறு சாய் குமரன் நகா் பகுதியில் வசித்து வருபவா் பி.ஆறுமுகம் (56). இவா் அவிநாசி ஊராட்சி ஒன்றிய ஆணையராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் பெருமாநல்லூரில் இருந்து அவிநாசி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அவிநாசி-அவிநாசிலிங்கம்பாளையம் அருகே சென்றபோது, எவ்வித சைகையுமின்றி நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் நிஷாந்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.