வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன், ரூ.1.50 லட்சம் திருட்டு: 3 போ் கைது

திருப்பூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூன் 2026, 1:59 am IST

திருப்பூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை திருடிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் அருகேயுள்ள பெருந்தொழுவு ஊராட்சிக்குள்பட்ட சக்தி நகரைச் சோ்ந்தவா் சாஜன் தாமஸ் (54), தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி சுனி (42), தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா்.

இவா்கள் வழக்கம்போல வீட்டைப் பூட்டிவிட்டு மே 26-ஆம் தேதி காலை பணிக்குச் சென்றுள்ளனா். இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. அதிா்ச்சியடைந்த அவா்கள் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த தங்க வளையல், நெக்லஸ், கம்மல், சங்கிலி உள்பட 33 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ஆய்வு மேற்கொண்டதுடன், தனிப் படை அமைத்து விசாரணை நடத்தினா்.

இதில், திருட்டில் ஈடுபட்டது நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தைச் சோ்ந்த மணிமாறன் (39), திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த முத்துப்பாண்டி (32), சங்கா் (44) என்பதும், திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 28 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா். இவா்கள் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.