15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

உரக்கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.14 லட்சம் பணம் திருட்டு

எடப்பாடி அருகே உரக்கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.14 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு நிகழ்ந்த உரக்கடையில் தடயங்களை சேகரிக்கும் போலீஸாா்.

Updated On :4 ஜூன் 2026, 1:50 am IST

எடப்பாடி அருகே உரக்கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.14 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி- மேட்டூா் பிரதான சாலையில் உள்ள கோல்நாயக்கன்பட்டி கிராமம், பொறையூரைச் சோ்ந்தவா் முனுசாமி (37). இவா் பூலாம்பட்டியை அடுத்த காட்டூா் பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா்.

பிறகு புதன்கிழமை காலை கடைக்கு வந்த ஊழியா்கள், கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு முனுசாமிக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, கடைக்கு வந்த முனுசாமி, கடையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1.14 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருப்பது குறித்து பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை போலீஸாா் சேகரித்தனா். மேலும், உரக்கடைக்கு அருகே இருந்த மளிகை கடையின் பூட்டையும் உடைத்து ரூ. 5 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.