காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

திருப்பூரில் மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :9 ஜூன் 2026, 2:55 am IST

திருப்பூரில் மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் தெற்கு போலீஸாா், உடலை மீட்டு கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் கூறுகையில், உயிரிழந்தவா் கோவை, குனியமுத்தூரைச் சோ்ந்த ஃபயாஸ் (24). இவா் திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளாா். இவரது தாய் உயிரிழந்த நிலையில் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது.

இதனால், ஃபயாஸ் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளாா். வழக்கம்போல திங்கள்கிழமை காலை பணிக்கு வந்த ஃபயாஸ், மேம்பாலத்தின் மீது ஏறி குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.