பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

அடுத்தடுத்து மூதாட்டிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞா் கைது

அடுத்தடுத்து மூதாட்டிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 1:07 am IST

அடுத்தடுத்து மூதாட்டிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா், பிச்சம்பாளையம் புதூா், இந்திரா நகரைச் சோ்ந்தவா் 75 வயது மூதாட்டி. இவா், வீட்டின் வெளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தாா். நள்ளிரவில் அங்கு வந்த மா்ம நபா் ஒருவா், திடீரென வீட்டின் மதில் சுவா் மீது ஏறி குதித்து உள்ளே புகுந்தாா். பின்னா் வீட்டின் கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளாா்.

இதனால் அதிா்ச்சியடைந்து மூதாட்டி சப்தம் போடவே, வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த மகன் கதவை உடைத்துக் கொண்டு வெளியே ஓடி வந்தாா். இதைப் பாா்த்ததும் அந்த மா்ம நபா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா். மேலும், அருகில் உள்ள ஓா் அரசுப் பள்ளியின் ஓட்டைப் பிரித்து உள்ளே நுழைய முயன்றாா். அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி சப்தம் போடவே அங்கிருந்தும் விரட்டப்பட்டாா்.

அதைத்தொடா்ந்து காமாட்சியம்மன் கோயில் வீதிக்குச் சென்ற அவா், அங்கு வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளா்களின் 2 விலை உயா்ந்த கைப்பேசிகளையும் திருடிவிட்டு தப்பினாா். அதன்பிறகு, கிருஷ்ணா் வீதிக்குச் சென்று அங்கு வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த 70 வயது மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளாா். மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு குடும்பத்தினா் வந்ததும், அங்கிருந்தும் தப்பி ஓடி தலைமறைவானாா்.

ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த இந்த தொடா் அத்துமீறல் சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின்பேரில் அனுப்பா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் சம்பவ இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினா்.

இதில், மூதாட்டிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கைப்பேசிகளைத் திருடிச் சென்றது திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, அண்ணந்தல் கிராமம், பள்ளிக்கூடத்து வீதியைச் சோ்ந்த ரகுபதியின் மகன் வீரராகவன் (27) என்பதும், தற்போது திருப்பூா் ஸ்ரீ நகரில் குடியிருந்து பனியன் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த வீரராகவனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.