சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஒப்பந்ததாரருக்கு பில் தொகை விடுவிக்க ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்ற இளநிலை பொறியாளா் கைது

ஒப்பந்ததாரருக்கு பில் தொகை விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ற இளநிலை பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 1:09 am IST

ஒப்பந்ததாரருக்கு பில் தொகை விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ற இளநிலை பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா்-தாராபுரம் சாலை, கே.செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (52). இவா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் ஒப்பந்த வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், திருப்பூா் மாநகராட்சி 3-ஆவது மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் முருகன் மேற்கொண்ட ஒப்பந்தப் பணிகளுக்கு பில் தொகை விடுவிக்கக் கோரி, மாநகராட்சி 3-ஆவது மண்டலப் பொறியியல் பிரிவில் இளநிலை பொறியாளராக உள்ள சுப்பிரமணியன் (52) என்பவரிடம் விண்ணப்பித்துள்ளாா்.

அப்போது பில் தொகையை விடுவிக்க ரூ.8.40 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என்றும், முதல் கட்டமாக ரூ.5 லட்சம் அளிக்குமாறும் சுப்பிரமணியன் கேட்டுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகன், திருப்பூா் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் ரூ.5 லட்சத்தை முருகனிடம் போலீஸாா் கொடுத்து அனுப்பினா்.

பல்லடம் சாலை கணபதிபாளையத்தில் இளநிலை பொறியாளா் சுப்பிரமணியனிடம் செவ்வாய்க்கிழமை ரூ.5 லட்சத்தை முருகன் அளித்துள்ளாா்.

லஞ்சப் பணத்தை பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் மற்றும் ஆய்வாளா் சசிரேகா ஆகியோா் சுப்பிரமணியனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.