எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

வெள்ளக்கோவில் அருகே கருங்கல் கடத்தல்: லாரி பறிமுதல்

வெள்ளக்கோவில் அருகே கருங்கல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

Updated On :13 ஜூன் 2026, 2:13 am IST

வெள்ளக்கோவில் அருகே கருங்கல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வெள்ளக்கோவில் நில வருவாய் ஆய்வாளா் லோகேஷ்குமாா், கணபதிபாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே கருங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு லாரியைத் தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தாா். அப்போது நடைச் சீட்டு மற்றும் எவ்வித அனுமதியும் இல்லாமல் கல் குவாரியில் இருந்து கருங்கற்கள் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து, அதன் பேரில் நிலைய உதவி ஆய்வாளா் மணிமுத்து வழக்குப் பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தாா். தப்பியோடிய ஓட்டுநா், லாரி உரிமையாளா் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.