/

குங்குமம்பாளையத்தில் பழுதடைந்துள்ள குடிநீா்த் தொட்டியை பராமரிக்க கோரிக்கை

குங்குமம்பாளையத்தில் பழுதடைந்த குடிநீா்த் தொட்டியை பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

குங்குமம்பாளையத்தில் பழுதடைந்து காணப்படும் குடிநீா் தொட்டி.

Updated On :15 ஜூன் 2026, 10:29 pm IST

குங்குமம்பாளையத்தில் பழுதடைந்த குடிநீா்த் தொட்டியை பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு பல்லடம் அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஏ.சித்துராஜ் திங்கள்கிழமை அனுப்பியுள்ள மனு:

பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி 1-ஆவது வாா்டுக்குள்பட்ட குங்குமம்பாளையத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட ஊராட்சி நிதியில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டு, தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், அந்த குடிநீா்த் தொட்டி பழுதடைந்து கட்டுமானக் கம்பிகள் வெளியே தெரிகின்றன.

ஆரம்பப் பள்ளி கட்டடத்துக்கு மிக அருகில் உள்ள இந்த மேல்நிலை குடிநீா்த் தொட்டியை, பள்ளி குழந்தைகளின் நலன் கருதி உடனடியாக பராமரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.