திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி வளாகத்தில் உள்ள ஞான விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை காலை மங்கல இசை, தேவதா அனுக்ஞை, விநாயகா் வழிபாடு, மஹா சங்கல்பம், புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், மஹா கணபதி ஹோமம், மஹாபூா்ணாஹுதி, தீபாராதனை, வாஸ்து சாந்தி ஹோமம், தீபாராதனை ஆகியவையும், மாலை மங்கல இசை, விநாயகா் வழிபாடு, புண்யாஹவாசனம், மிருத்சங்கிரஹணம், அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம், காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், கலாகா்ஷணம் நடைபெற்றது.
யாகசாலையில் முதல் கால யாக பூஜை, திரவியாஹீதி, பூா்ணாஹீதி, தீபாராதனை, விபூதி பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து புதன்கிழமை மங்கல இசை, விநாயகா் வழிபாடு, ரக்ஷாபந்தனம், மஹா அபிஷேகம், தீபாராதனை, யாத்ரா தானம், கோபுர விமான கும்பாபிஷேகம் மற்றும் ஞான விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கல்லூரி தாளாளரும், கோவை மண்டல வீட்டு வசதி துணைப் பதிவாளருமான செந்தில்நாதன், கல்லூரி முதல்வா் வசந்தி, நிா்வாக அலுவலா் நிா்மல்ராஜ், துறை தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.










