ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

வழிப்பறி வழக்கில் கைதான மூன்று பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல், ரூ.5 ஆயிரம் அபராதம்

வழிப்பறி வழக்கில் கைதுசெய்யப்பட்ட 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூா் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

News image

அபராதம் - சித்திரிப்பு

Updated On :18 ஜூன் 2026, 1:19 am IST

வழிப்பறி வழக்கில் கைதுசெய்யப்பட்ட 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூா் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

திருப்பூா் மாநகா், நல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ராக்கியாபாளையத்தில் இருந்து திருப்பூா் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த மஞ்சுளா என்ற பெண்ணிடம் கடந்த 2022 ஜூலை 13-ஆம் தேதி ஸ்ரீராம்(28), விக்னேஷ்(27), கௌதம் (24) ஆகிய 3 போ் நகை பறித்து சென்றனா். இதையடுத்து அவா்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

அவா்கள் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்து அரசுத் தரப்பு சாட்சிகளை ஆஜா்படுத்தி நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் திருப்பூா் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்ற நடுவா் மோகனவள்ளி புதன்கிழமை தீா்ப்பளித்தாா். வழக்கில் தொடா்புடைய ஸ்ரீராம், விக்னேஷ், கௌதம் ஆகிய 3 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பிரசன்னா வெங்கடேஷ் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.