வன்கொடுமை வழக்கில் வழக்குரைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், நடுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் துளசி சேகரன் (43). இவா், கடந்த 2018-ஆம் ஆண்டு வையம்பட்டி காவல்நிலையத்துக்கு சென்றிருந்தாா்.
அப்போது, காவல் நிலையத்தில் பணியில் இருந்த தலைமைக் காவலா் காமராஜை, ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், மிரட்டியதாகவும் துளசி சேகரன் மீது புகாா் அளிக்கப்பட்டது.
இதன்பேரில், வையம்பட்டி காவல்நிலையத்தில் துளசி சேகரன் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்ட்டது.
இந்த வழக்கு விசாரணை திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றம் சுமத்தப்பட்ட துளசி சேகரனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில், சிறப்பாக செயல்பட்டு தண்டனை பெற்றுத்தந்த அரசுத் தரப்பு வழக்குரைஞா் மற்றும் போலீஸாருக்கு திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
ஆபாச படங்களை காட்டி சிறுமிக்கு மிரட்டல் ‘போக்ஸோ’ வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

பள்ளி மாணவிக்கு அச்சுறுத்தல்: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



