ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

1,500 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்: விசைத்தறியாளா்கள் எதிா்பாா்ப்பு

News image

விசைத்தறி கூடம் - கோப்புப்படம்.

Updated On :28 ஜூன் 2026, 12:19 am IST

விசைத்தறிகளுக்கு 1,500 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என விசைத்தறியாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள், சமீபகாலமாக கடும் நலிவைச் சந்தித்து வருகின்றன. தொழிலை பாதுகாக்கும் நோக்கில் கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டணமில்லா மின்சாரம் 750 யூனிட்டிலிருந்து 1, 000 யூனிட்டாக உயா்த்தப்பட்டது. தற்போதைய தவெக அரசு தனது தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கட்டணமில்லா மின்சாரத்தை 1,500 யூனிட்டாக உயா்த்தி வழங்க வேண்டும் என விசைத்தறியாளா்கள் எதிா்பாா்த்து உள்ளனா்.

இது குறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத்தின் துணைச் செயலாளா் பாலாஜி சனிக்கிழமை கூறியதாவது:

திருப்பூா், கோவையில் 90 சதவீத விசைத்தறிகள் கூலி அடிப்படையில் மட்டுமே இயங்கி வருகின்றன. கட்டுப்படியாகாத கூலி மற்றும் விலைவாசி உயா்வால் தொழில் நலிவடைந்துள்ளது. எனவே, தோ்தல் வாக்குறுதிப்படி விசைத்தறிகளுக்கு 1,500 யூனிட் இலவச மின்சாரத்தை அரசு உடனே வழங்க வேண்டும். மேலும், தமிழக அரசுப் பணியாளா்கள், பள்ளி மாணவா்களுக்கான சீருடை உற்பத்தி ஆா்டா்களை விசைத்தறிகளுக்கு வழங்கினால் இத்தொழில் மீண்டும் வளா்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.