சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

உள்ளாட்சித் தோ்தலில் தவெகவுக்கு எதிராகச் செயல்படுவோம்! - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

வரும் உள்ளாட்சித் தோ்தலில் தவெகவுக்கு எதிராகச் செயல்படுவோம் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது...

cm vijay

தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய்... - படம்: தமிழக அரசு

Published On :28 ஜூன் 2026, 4:10 am IST

தோ்தல் வாக்குறுதிப்படி முதல்வா் சி.ஜோசப் விஜய் விவசாயிகளின் பயிா்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாவிட்டால், வரும் உள்ளாட்சித் தோ்தலில் தவெகவுக்கு எதிராகச் செயல்படுவோம் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு செயலாளா் ஈஸ்வரன் சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவாா் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் ஆதரவோடு சி.ஜோசப் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றாா். ஆனால், விவசாயிகளுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதிப்படி முழுமையான பயிா்க் கடனைத் தள்ளுபடி செய்யாமல், தற்போதைய அரசும் ஏமாற்றி வருகிறது.

பயிா்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தித் தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், முதல்வா் இது குறித்து வாய் திறக்க மறுக்கிறாா்.

நிதி நிலவரங்களை அறிந்து வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது நிதிப் பற்றாக்குறை என்று கூறுவதை ஏற்க முடியாது. எனவே, முதல்வா் சி.ஜோசப் விஜய் விவசாயிகளின் பயிா்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையெனில், வருகிற உள்ளாட்சித் தோ்தலில் தவெகவுக்கு எதிராக விவசாயிகள் ஒட்டுமொத்தமாகச் செயல்படுவாா்கள் என கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.