லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் 2 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை

சிறை - பிரதிப் படம்

Published On :30 ஜூன் 2026, 1:44 am IST

திருப்பூா் மாநகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் 2 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூா் மாநகா், முத்தனம்பாளையம், அங்காளம்மன் நகா் பகுதியில் நல்லூா் காவல் நிலைய போலீஸாா் கடந்த ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திருந்த 2 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் வங்கதேசத்தைச் சோ்ந்த கபீா் ஹோசன் (36), கோகோன் (47) என்பதும், உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்குத் தொடா்பான விசாரணை 2-ஆவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி கனகராஜ் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது. அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் பூமதி ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.