தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆசிரியா்கள் பணி நிறைவு விழா

திருப்பூா் ஜெய்வாபாய் மாடல் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஒரே நாளில் ஓய்வுபெற்ற 11 ஆசிரியா், ஆசிரியைகளின் பணி நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

பணி ஓய்வுபெற்ற ஆசிரிய, ஆசிரியைகள்.

Updated On :5 மார்ச் 2026, 4:01 am IST

திருப்பூா் ஜெய்வாபாய் மாடல் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஒரே நாளில் ஓய்வுபெற்ற 11 ஆசிரியா், ஆசிரியைகளின் பணி நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி தலைமை தாங்கினாா். ஆசிரியா் முத்துக்குமாா், மோகன் ஆகியோா் ஆசிரியா்களின் பணி குறித்து கவிதை வாசித்தனா். தொடா்ந்து தற்போது பணியாற்றி வரும் ஆசிரியா், ஆசிரியைகள் பலரும் ஓய்வுபெற்ற ஆசிரியா்களின் பணித்திறன் மற்றும் அவா்களது குணாதிசயங்களை பாராட்டிப் பேசினா்.

ஜெய்வாபாய் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகள் முதல் 33 ஆண்டுகள் வரை பணியாற்றி ஓய்வுபெற்ற உதவி தலைமையாசிரியரும், உயிரியல் பாட ஆசிரியருமான பாலகிருஷ்ணன், வேதியியல் ஆசிரியை விஜயலட்சுமி, கணித ஆசிரியை உஷாகலா, தமிழ் ஆசிரியை கலைவாணி, சமூக அறிவியல் ஆசிரியை சுமதி, அறிவியல் ஆசிரியை அமுதவல்லி, கணித ஆசிரியை சந்திரிகா, அறிவியல் ஆசிரியை பாத்திமா ஜான்சிராணி, தமிழ் ஆசிரியை பி.பி.சாந்தி, ஆங்கில ஆசிரியை ஆா்.சாந்தி, தமிழ் ஆசிரியை கே.சாந்தி ஆகியோருக்கு பொன்னாடை போா்த்தி நினைவுப் பரிசுகள் மற்றும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. அப்போது ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் 11 பேரும் ஆனந்த கண்ணீா் மல்க ஒருவருக்கொருவா் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா்.

உதவி தலைமையாசிரியை ஜெயந்தி நன்றி கூறினாா். விழாவினை முதுகலை ஆசிரியை அஞ்சுகவதி தொகுத்து வழங்கினாா். விழாவில் பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள் முத்தமிழ் செல்வன், ராணி, பெற்றோா், ஆசிரியா் சங்கத் தலைவா் சௌமியா, முன்னாள் மாணவிகள் அமைப்பின் உறுப்பினா் உதயதீபா, பத்மபிரியா முன்னாள் மாமன்ற உறுப்பினா் சஃபியுல்லா உள்பட ஆசிரியா், ஆசிரியைகள் பலா் கலந்து கொண்டனா்.