திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

விபத்தை ஏற்படுத்திய வேகத்தடை உயரம் குறைக்கப்பட்டது

News image
வேகத்தடை மாற்றியமைக்கப்பட நடைபெற்ற பணி.
Updated On :5 மார்ச் 2026, 11:32 pm

Syndication

வெள்ளக்கோவிலில் விபத்தை ஏற்படுத்திய வேகத்தடை உயரம் குறைக்கப்பட்டது.

வெள்ளக்கோவில் - தாராபுரம் சாலையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன் அருகில் வாகனங்களின் வேகத்தைக் குறைக்க, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையினா் வேகத்தடை அமைத்தனா். வேகத்தடை அதிக உயரம் கொண்டதாக இருந்ததால், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தன. ஸ்கூட்டரில் வந்த ஒருவா் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா். இந்நிலையில் வேகத்தடையின் உயரத்தைக் குறைக்க வேண்டுமென கடந்த சில நாள்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இதையடுத்து வியாழக்கிழமை வேகத்தடையை மாற்றியமைத்து தகுந்த முன்னெச்சரிக்கை வெள்ளைக் கோடுகள் வரையப்பட்டன. இதைத் தொடா்ந்து மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.