திருப்பூா்: மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பூா், பழனிச்சாமி நகரைச் சோ்ந்தவா் சரவணன் (35). போயம்பாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனை முன்பு ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த இவரது மோட்டாா் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின்பேரில் அனுப்பா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா்.
அதனடிப்படையில் பெருமாநல்லூரைச் சோ்ந்த ரமேஷ்குமாா் (32) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினா். இதில் சரவணனுக்கு சொந்தமான மோட்டாா் சைக்கிளை திருடியதை ரமேஷ்குமாா் ஒப்புக் கொண்டாா். மேலும், திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் 3 மோட்டாா் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து ரமேஷ்குமாரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
பெண்கள் குறித்து அவதூறு விடியோ: இளைஞா் கைது

சென்னையில் செவிலியருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இளைஞா் வெட்டிக் கொலை
திருடிய கைப்பேசியிலிருந்து பெண்ணிடம் அவதூறாக பேசியவா் கைது
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

